Monday, September 21

Tag: actor Santhanam

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

News
From left  Creative Producer V.Shree Natraj who represent People Media Factory,Actor Santhanam and Director Karthik Yogi   பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் 'டிக்கிலோனா' புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'! தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக்பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் கொடுத்துள்ளது. 'விட்னெஸ்' மற்றும் 'சாலா' போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தது. இப்போது அதன் மூன்றாவது தயாரிப்பில் (புரொடக்சன் நம்பர் 3) உருவாகும் படத்தில் 'டிக்கிலோனா' பட ப்ளாக்பஸ்டர் வெற்றி கூட்டணியான நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள...
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்!

பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்!

News
  வைரலாகி வரும் சந்தானத்தின் காமடி “கிக்” பட மேக்கிங் வீடியோ! விரைவில் திரையில் !!! நேற்று  “கிக்” பட  வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம், நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது. காமடியுடன் படத்தை பிரமாண்டமாக காட்டியதுடன், ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார்கள். பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. Fortune Films நவீன் ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் தயாரிக்கிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மிகப்பெரும் பொருட்செலவில், பிரமாண்டமான 'செட்'கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்...

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’!

News
Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம். அந்த தெலுங்கு படத்தின் உரிமை ...
‘கிக்’ படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடிய நடிகர் சந்தானம்!

‘கிக்’ படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடிய நடிகர் சந்தானம்!

News
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..." (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் "கிக்". நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த 'கிக்' படம். பல ஹிட் படங்...
எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”!

எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”!

News
'' எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும். நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருத்தரை கண்டுபிடிக்கவே முடியலை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டால் நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம்னு தோணும். நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த 'கிக்' படம். பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். டாம்-ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியி...
சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘கிக்’

சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘கிக்’

News
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார். இதில், சந்தானம் ஜோடியாக, 'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி,...
“மக்களை கவலைகளை மறந்து சிரிக்க வேண்டும்” – சந்தானம்!

“மக்களை கவலைகளை மறந்து சிரிக்க வேண்டும்” – சந்தானம்!

News
"மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்" 'ஏ 1' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தானம் பேச்சு! 'ஏ 1' படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, "தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்...
‘டிக்கிலோனா’ படப்பிடிப்பு நிறைவு!

‘டிக்கிலோனா’ படப்பிடிப்பு நிறைவு!

News
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா...
நானூறாவது படத்தில் நடிக்கும் செளகார் ஜானகி!

நானூறாவது படத்தில் நடிக்கும் செளகார் ஜானகி!

News
'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் 'சௌக்காரு' என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் 'சௌக்காரு' என்ற பெயரை இணைத்து 'சௌக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசனுடன் நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'பார்த்த ஞாபகம் இல்லைய...
மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் படம்!

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் படம்!

News
முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள் இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார். இவர் ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர். இப்படத்தின் பெயர்...