Monday, September 21

Tag: actor sasikumar

நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’

நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’

News
  காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் ந...
இம்மாதம் 18ஆம் தேதி வெளியாகும் சசிகுமாரின்  ‘நான் மிருகமாய் மாற’

இம்மாதம் 18ஆம் தேதி வெளியாகும் சசிகுமாரின்  ‘நான் மிருகமாய் மாற’

News
  செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் குழுவினர் நேற்று (15.11.2022)  பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.  படத்தின் ஒலிப் பொறியாளர் KNACK ஸ்டுடியோஸ் உதயகுமார் பேசுகையில்: இந்தத் திரைப்படம் ஒலியை சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது. எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் ...
சசிகுமாரின் ‘காரி’ பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட இயக்குனர் வெற்றிமாறன்!

சசிகுமாரின் ‘காரி’ பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட இயக்குனர் வெற்றிமாறன்!

News
  என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில கதாநாயகர்களில் நடிகர் சசிகுமார் ரொம்பவே முக்கியமானவர். அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார். கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவி...
‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு!

‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு!

News
ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. 1990 - 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமனுஜம், சென்றாயன், மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டம...