
Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் மிஸ் யூ…!
Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் மிஸ் யூ...*
என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்..
டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் திரையரங்குகளில் பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் கொடுத்த அனுபவம், அவர்களை நேர்மறையாக விமர்சனம் செய்ய வைத்தது.. பார்த்தவர்கள் கொண்டாடியதுடன், குடும்பத்துடன் பார்க்க இத் திரைப்படம் நல்ல தேர்வு என ஆதரவு தெரிவித்தனர். பெரிய அளவில் ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் இத்திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகவில்லை என்றாலும், தற்பொழுது தரமான திரைப்படம் என்னும் மதிப்புடன் வார இறுதி நாட்களில் முன்பதிவை மும்மடங்கு பெருக்கி இருக்கிறது.
குறிப்பாக, ஒட்டு மொ...