Sunday, October 4

Tag: actor sivakumar

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

News
‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’ சென்னை, செப்டம்பர் - 05 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். உதவி தேவைப்படும் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 46-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை தியாகராய நகர் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக அரங்கில் வைத்து நேற்று மாலை (செப்டம்பர் 04) நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி ம...
“45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

“45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

News
"45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ! SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45. கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... இயக்குநர் அர்ஜுன் ஜன்யா பேசியதாவது… அ...
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

News
மாணவர்கள் கவனம் சிதறாமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் – சிவகுமார் சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா மனிதனை முழுமையாக்குவது கல்வி மட்டுமே – கார்த்தி திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு ந...
சிவகுமார் வழங்கும்  ‘திருக்குறள் 100’

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’

News
நடிகர் சிவகுமார் வழங்கும் ' திருக்குறள் 100' திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 'வேண்டுதல் வே...
“மகத்தான நடிகை ஜெயசித்ரா” – சிவகுமாரின் பிறந்த நாள் வாழ்த்து!

“மகத்தான நடிகை ஜெயசித்ரா” – சிவகுமாரின் பிறந்த நாள் வாழ்த்து!

News
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், 'நானே என்னுள் இல்லை' படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ‘பு...
YG மஹேந்திரனின் தாயார் சிவகுமாருக்கு எழுதிய கடிதம்!

YG மஹேந்திரனின் தாயார் சிவகுமாருக்கு எழுதிய கடிதம்!

News
ஒய்.ஜி மஹேந்திரனின் தயார் , ராஜலட்சுமி பார்த்தசாரதி தனது 93 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவர் பத்திரிகையாளர், கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மேலும் பி.எஸ். பி. பி. குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவர் . இந்நிலையில் நடிகர் சிவகுமார் கம்பராமாயணம் - மகாபாரத உரைகளை டிவி இல் பார்த்த YG மஹேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . அது பின்வருமாறு ! அன்புள்ள சிவகுமார் , ''நீங்கள் ராமாயணத்தை கூறுவதையும் , விவரிப்பதையும் பார்த்த பிறகு, கலியுக கம்பனாக என் கண்களுக்கு நீங்கள் தெரிகிறீர்கள். வியாசர் மற்றும் ராஜாஜி இணைந்த அடுத்த கலியுக வியாசர் நீங்கள் என்று நான்  நம்புகிறேன். நீங்களும் மிகவும் சரளமாக மஹாபாரதத்தினை தமிழில் விவரிக்கிறீர்கள். மனப்பூர்வமாக உங்களை நான் எனது மூன்றாவது மகனாக பார்க்கிறேன். உங்களை போன்ற ஒரு வியத்தகு தமிழ் அறிஞரை கண்...