‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியானது!
விஜய் தேவரகொண்டா, தில்ராஜு மற்றும் ரவி கிரண் கோலா கூட்டணியில் டிசம்பர் 2026-ல் வெளியாகும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது!
மதிப்புமிக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இரத்தம் தோய்ந்த உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற கிளிம்ப்ஸூடன் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. படம் பற்றிய ஆர்வத்தையும் பல கேள்விகளையும் பார்வையாளர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் எழுப்புகிறது. புதிய இடம், புதிய பேச்சுவழக்கு, வித்தியாசமான தோற்றம் மற்றும் இதுவரை பா...






