Wednesday, November 25

Tag: actor vishal

புதிய கட்சியை தொடங்கும் விஷால்”!

புதிய கட்சியை தொடங்கும் விஷால்”!

News
மக்களுக்கு போதுமான வசதி இல்லை; அதனால் தான், நான் அரசியலுக்கு வருகிறேன்; விஷால்! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது விஷால் பேசியதாவது:- அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதுபோன்ற பண்டிகை நாட்களை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும். இந்த சங்கத்தில் இருக்கிற நீங்களெல்லாம் என் குடும்பத்தினர் மாதிரி. அதனால்தான் இங்கு வந்துள்ளேன்.என்னுடைய முதல் படத்திலிருந்து இன்று வரை ஆதரவு தருகிறீர்கள். இப்போ...
18ஆம் வருடத்தில் சண்டக்கோழி!

18ஆம் வருடத்தில் சண்டக்கோழி!

News
18ஆம் வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி! நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும். நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் சண்டக்கோழி திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது.. இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’ ஒளிபரப்பாகும்போத...

சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்!

News
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்.... இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் திபாவளி தினமான இன்றும் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதால் படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை கடைநிலை ஊழியர் தொடங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது....
மூத்த நடிகருக்கு விஷால் இறுதி அஞ்சலி!

மூத்த நடிகருக்கு விஷால் இறுதி அஞ்சலி!

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு பொதுச்செயலாளர் விஷால் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான துணை நடிகர் ஈட்டி கோவிந்தன் (வயது 78) திருமணமாகாதவர். இவருக்கு சொந்தங்கள் எவரும் இல்லாத நிலையில் ஆதரவற்று மரணித்தார். இவர் கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அருகில் உள்ள சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு கடந்த 28ம் தேதி அன்று இறந்தார். இவர் இறந்த செய்தி நடிகர் சங்கத்துக்கு தெரியவந்த்து. உடனே நடிகர் சங்க பொது செயலாளர் விஷால்  விரைந்து வந்து, வடபழனி ஏ வி எம் பின்புறம் உள்ள இடுகாட்டிற்க்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து இறுதி சடங்கு முடியும் வரை உடனிருந்து தனது இறுதி மரியாதையை செலுத்தியதுடன், இறுதி சடங்கின் அனைத்து செலவுகளையும் ஏற்றார். இனிவரும் ...

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

News
'மார்க் ஆண்டனி' இந்தி சென்சார் சான்றிதழ் விவகாரம் - நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ விசாரணை நிறைவு Exclusive தகவல்கள்... நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு சென்சார் சான்றிதழ் பெற மும்பையில் உள்ள சென்சார் போர்ட் அலுவலகத்தை அனுகியது ஆனால் படக்குழு எதிர்பார்த்தது போல் அவ்வளவு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்க அங்கு வழி வகை இல்லாத சூழ்நிலையே நிலவியது அதுமட்டுமின்றி சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டு மெர்லின் மேனகா என்பவர் மூலம் படக்குழுவை சென்சார் போர்ட் நிர்வாகிகள் அனுகியுள்ளனர், இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அலோசனை செய்தபோது இனி தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவிற்கு இப்படி நிகழக்க...
புரட்சி தளபதி விஷால் செய்த புரட்சி!

புரட்சி தளபதி விஷால் செய்த புரட்சி!

News
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்.. இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்.!! இனி மும்பை செல்ல வேண்டிய அவசியம் இல்லை நடிகர் விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு விடியல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு...
பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

News
காரைக்குடி அருகே உள்ள ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்! நமது இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விஷால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும், சிறப்புமிக்க ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் திறமையான மாணவியர் செல்வங்களுடன் சிறப்புரை ஆற்றினார் ...
விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர்  நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

News
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி - விஷால் வெற்றிகூட்டணி இணையும் "விஷால்-34" படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது. விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் "விஷால்-34" படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ! ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக...
விஷால்-இயக்குநர் ஹரி இணையும் திரைப்படம்!

விஷால்-இயக்குநர் ஹரி இணையும் திரைப்படம்!

News
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! *ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ ...
விஷாலின் தேவி அறக்கட்டளை நடத்திய கலந்தாய்வு!

விஷாலின் தேவி அறக்கட்டளை நடத்திய கலந்தாய்வு!

News
நடிகர் விஷால் ஆண்டு தோறும் +2 தேர்வில் தேர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத விவசாய குடுபத்தினார்கள், தாய் தந்தை இல்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்காக தனது தேவி அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வருகிறார். அதே போன்று இந்த வருடம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை குடும்பம் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் பெற்றோருடன் கலந்துகொண்டார்கள்...