விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.
இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்,
எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந...








