ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ!
காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!
தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்'-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோஹாட்ஸ்டார் தமிழ், 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில...

