சரித்திரம் படைக்கத் தயாராகும் சாஹோ திரைப்படம்!
இந்திய அளவில் பெரும் ஏற்படுத்தியிருக்கும் சாஹோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற படக்குழுவினர் பேசியதாவது...
பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு பலம் மிக்க வார்த்தை. படத்தைப் பார்க்கும்போது இது புரியும். பாகுபலி படத்துக்குப் பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மீண்டும் ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் சுஜித் சொன்ன கதை என் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் இதற்கு இரண்டு வருடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் ஓவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியருந்தது.
தயாரிப்பாளர்களும் நிறைய முதலீடு செய்து விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டைக் காட்சி நிபுணர்களும...
