சரித்திரம் படைக்கத் தயாராகும் சாஹோ திரைப்படம்!

0

 308 total views,  1 views today

இந்திய அளவில் பெரும் ஏற்படுத்தியிருக்கும் சாஹோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற படக்குழுவினர் பேசியதாவது…


பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு பலம் மிக்க வார்த்தை. படத்தைப் பார்க்கும்போது இது புரியும். பாகுபலி படத்துக்குப் பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மீண்டும் ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் சுஜித் சொன்ன கதை என் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் இதற்கு இரண்டு வருடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் ஓவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியருந்தது.
தயாரிப்பாளர்களும் நிறைய முதலீடு செய்து விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டைக் காட்சி நிபுணர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.அவர்கள் பணி சிறப்பாக அமைய அதற்கான நேரத்தை அவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். மேலும், அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

அருண் விஜய்: இந்தப் படத்தில் நடித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைக்குரிய ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இயக்குநர் சுஜித் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத்தான் இருப்பார். ஆனால் நட்சத்திர நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் மிக்ச் சிறப்பாக இருக்கும். அவர் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததிற்கும் நன்றி. இரண்டரை வருடங்ள் கழித்து வரக்கூடிய படம் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்ப தெளிவாக இருந்தார். பாகுபலிக்கு பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். அவருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. பிரபாஸ் மிகவும் எளிமையான மனிதர்.

ஷ்ரத்தா கபூர் : இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி தமிழ்ப் படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும், மும்மொழிப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். 
இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாகச் செய்துள்ளேன்.
ஏராளமான பொருட் செலவில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் சாஹோ இம்மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE