Tuesday, October 20

Tag: ajmal

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக்!

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக்!

News
அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது! நடிகர் அஜ்மல் கோ, நெற்றிக் கண் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகிறது. இதுகுறித்து அஜ்மல் கூறும் போது, முதலில் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு பல தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தது. ஆனாலும் அவரைப் பிடித்தவர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர். என்னால் முடிந்த வரை அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சிக்கிறேன். ராம் கோபால் வர்மாவும் எனக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருக்கிறார். இது எனது...
“நெற்றிக்கண்” படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல் ! 

“நெற்றிக்கண்” படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல் ! 

News
எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதில் தனது பன்முகத்தன்மை கொண்ட புலமையை நிரூபித்து, நல்ல நடிகர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் அஜ்மல். ரௌத்திரம் மிக்க இளைஞனாக “அஞ்சாதே”,  ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்”  என தான் நடிக்கும் அனைத்து படங்களிலும், வித்தியாச நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் நடிகராக விளங்கி வருகிறார் அஜ்மல். தற்போது இவர்  நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மர்மங்கள்  நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும்  திருப்பம் ஏற்படுத்தும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக ந...
அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

News
அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - Darkroom Creations இயக்கம் - A.T.ஞானம் ஒளிப்பதிவு – L.K.விஜய் படத்தொகுப்பு – ரங்கிஸ் பாடல் - பா.விஜய் நடனம் - சூரஜ் நந்தா மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)...