Saturday, April 26

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

Loading

அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.

முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – Darkroom Creations
இயக்கம் – A.T.ஞானம்
ஒளிப்பதிவு – L.K.விஜய்
படத்தொகுப்பு – ரங்கிஸ்
பாடல் – பா.விஜய்
நடனம் – சூரஜ் நந்தா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)