Friday, October 23

Tag: akshy kumar

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ‘ஹைவான்’ ஷூட்டிங் தொடக்கம்!

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ‘ஹைவான்’ ஷூட்டிங் தொடக்கம்!

News
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் - தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்! இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார்...
பரபர ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படே மியன் சோட்டே மியன் – டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பரபர ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படே மியன் சோட்டே மியன் – டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News
அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப் கூட்டணியில் படே மியன் சோட்டோ மியன் டிரைலர் ரிலீஸ் அப்டேட்! இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "படே மியன் சோட்டே மியன்" திரைப்படத்தின் புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூஜா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "படே மியன் சோட்டே மியன்" படத்தின் டிரைலர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. இந்த ஆண்டின் தலைசிறந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் "படே மியன் சோட்டே மியன்" டிரைலர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு படத்திற்கான ஆவலை தூண்டியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ போஸ்டரில் படே மியன்-ஆக அக்ஷய் குமார் மற்றும் சோட்டே மியன்-ஆக டைகர் ஷெராஃப் மற்றும் மனுஷி சில்லர் மற்றும் ஆல்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ...
அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்!

அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்!

News
அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்! அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீசர் வெளியாகி உள்ளது. https://www.youtube.com/watch?v=S1paPy2dpYk இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர். வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தேசபக்தி உணர்வுடன் கூடிய இந்த டீஸர் ரசிகர்களை ...
தமிழனை தவிர்க்கவே முடியாது-  காஞ்சனா ஹந்தி ரீமேக் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

தமிழனை தவிர்க்கவே முடியாது- காஞ்சனா ஹந்தி ரீமேக் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

News
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்...
ஹிந்தியில் காஞ்சனா 1…

ஹிந்தியில் காஞ்சனா 1…

News
 காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற  பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப் படுகிறது...லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்... படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..