இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுன் இணையும் பிரம்மாண்ட திரைப்படம்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !
இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers) நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas ) உடன் இணைந்து தயாரிக்கு...









