அம்…ஆ விமர்சனம்
அம்...ஆ விமர்சனம்
இயற்கை எழில் கொஞ்சும் அழகான கேரள மலைப்பகுதி ஒன்றில் தேவதர்ஷினி குழந்தையுடன் வசித்து வருகிறார்.
அந்தக் குழந்தையுடன் யாராவது பேச்சு கொடுத்தாலோ, நெருக்கம் காட்ட முயன்றாலோ தேவதர்ஷினிக்கு சற்றும் பிடிப்பதில்லை.
அந்த கிராமத்துக்கு தார் ரோடு போடுவதற்காக வரும் திலீஷ் போத்தனுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்வது உதவுகிறார் கிராம பஞ்சாயத்து மெம்பர்.
திலீப் போத்தேன் ஒருமுறை தேவதர்ஷினியுடன் பேச வரும்போது அவர் பதற்றமடைந்து மிகவும் பயப்படுகிறார். தேவதர்ஷினியின் இந்த பயத்திற்கும் பதற்றத்துக்கும் காரணம் என்ன? குழந்தையுடன் மற்ற யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்ள தேவதர்ஷிணிக்கு என்ன அவசியம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது அம்மா...ஆ திரைப்படம்.
வாடகைத்தாய் என்ற கருப்பொருளை வைத்து இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சென்டிமென்ட் கலந்த அழுத்தமான கதையுடன், பலமான திரைக்கதை அமைத்த...
