Friday, October 23

அம்…ஆ விமர்சனம்

Loading

அம்…ஆ விமர்சனம்

இயற்கை எழில் கொஞ்சும் அழகான கேரள மலைப்பகுதி ஒன்றில் தேவதர்ஷினி குழந்தையுடன் வசித்து வருகிறார்.
அந்தக் குழந்தையுடன் யாராவது பேச்சு கொடுத்தாலோ, நெருக்கம் காட்ட முயன்றாலோ தேவதர்ஷினிக்கு சற்றும் பிடிப்பதில்லை.
அந்த கிராமத்துக்கு தார் ரோடு போடுவதற்காக வரும் திலீஷ் போத்தனுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்வது உதவுகிறார் கிராம பஞ்சாயத்து மெம்பர்.

திலீப் போத்தேன் ஒருமுறை தேவதர்ஷினியுடன் பேச வரும்போது அவர் பதற்றமடைந்து மிகவும் பயப்படுகிறார். தேவதர்ஷினியின் இந்த பயத்திற்கும் பதற்றத்துக்கும் காரணம் என்ன? குழந்தையுடன் மற்ற யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்ள தேவதர்ஷிணிக்கு என்ன அவசியம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது அம்மா…ஆ திரைப்படம்.
வாடகைத்தாய் என்ற கருப்பொருளை வைத்து இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சென்டிமென்ட் கலந்த அழுத்தமான கதையுடன், பலமான திரைக்கதை அமைத்து அம்…ஆ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன். முழு மேக்கப்புடன் பல படங்களில் பார்த்து பழகிய தேவதர்ஷினி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அளவான மேக்கப்புடன் அருமையான வேடத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் சிறந்த நடிகை தேர்வுக்கான பட்டியலில் கண்டிப்பாக இவர் பெயரும் இடம் பெறும்.
வார்டு மெம்பராக வரும் ஜாஃபர் இடுக்கி தனது கலகல பேச்சாலும் நடிப்பாலும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
திலீஷ் போத்தன் தனது பாத்திரத்தை உணர்ந்து மிக யதார்த்தமா நடிப்பை வழங்கி இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் அனீஷ்லாலின் அற்புதமான ஒளிப்பதிவு.
கேரள மலைப் பகுதிகளில் நாமே வாழ்ந்து விட்டு வந்த உணர்வைத் தருகிறது.
கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்களின் மலையாள வாடை வீசுகிறது என்றாலும் மனதுக்கு இதமாகவே இருக்கிறது.
குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக அதைப் பெற்ற வாடகை தாயின் போராட்டம் ஒரு பக்கம், பெறாத அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடும் தேவதர்ஷினியின் போராட்டம் ஒரு பக்கம் என்று அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மூலம் அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் தாமஸ் செபஸ்டியன்.
குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய தரமான படம். மதிப்பெண் 4/5