Wednesday, September 23

Tag: Anali

பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  படமாக்கப்பட்ட ‘அனலி’ திரைப்படம்!

பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  படமாக்கப்பட்ட ‘அனலி’ திரைப்படம்!

News
சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் பிரமாண்ட தயாரிப்பில் சிந்தியா லூர்டே நடிப்பில் உருவாகியுள்ள அனலி! *இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட "அனலி" ஃபர்ஸ்ட் லுக்* சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி". இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த  இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, "இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் ...