Tuesday, September 1

Tag: Anirudh Ravichander

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இசை அமைப்பாளர் அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இசை அமைப்பாளர் அனிருத்!

News
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்! இந்தியா, ஜூன் 15, 2026: மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங...