Tag: Aniruth

“தனுஷு ராசி நேயர்களே” படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்!
இன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.
இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது...
கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என
எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நில...

ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் “தர்பார்”
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு “தர்பார்” என பெயர் வைத்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன்முதலாக இணையும் படம் இது. இந்த “தர்பார்“ படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘2.0’ எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்௸ன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியோடு லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது.
பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் இது . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நயன்தாரா மூன்று படங்களில் நடித்து 11 வர...

“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக அனிருத் பாடிய பாடல்…
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார். அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள் இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்துக்காக 'கண்ணம்மா' என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.
படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெ...