அஞ்சாமை _ விமர்சனம்
அஞ்சாமை _ விமர்சனம்
இந்தியா முழுதும் மருத்துவ கல்வியில் சேர்வதற்காக ஒன்றிய அரசு, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை அமல்படுத்தியதை அடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டபிரச்சினை- அதனால் பறிபோன உயிர்கள் - பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த விவகாரத்தை பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறது அஞ்சாமை திரைப்படம்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராமத்தில் வாழ்கிறது 'சர்க்கார்' என்பவரது எளிய விவசாய குடும்பம். சர்க்காரின் மகன், அருந்தவம் மருத்துவம் படிக்க விரும்புகிறார். அதற்காக புதிய நுழைவுத் தேர்வு ( நீட்) எழுத வேண்டிய கட்டாயம். தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம் கேட்டவருக்கு, ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையம் கிடைக்கிறது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர், தனது தந்தை சர்க்காருடன் ஜெய்ப்பூர் புறப்படுகிறார். கடைசி நேரத்தில் தேர்வு உத்தரவு வந்த காரணத்தால் ரயிலில் இடம்...
