ராம் அப்துல்லா ஆண்டனி படத்தில் கான்ஸ்டபிளாக அசத்தும் சௌந்தரராஜா !
“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தில் இணைந்துள்ள சௌந்தரராஜா !
Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில்,
பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்று மாணவர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ஒருவராக, காவல்துறையில் நேர்மையான கான்ஸ்டபிளாக, பிரபல நடிகர் சௌந்தரராஜா நடித்துள்ளார். படத்தின் மையமாக, மாணவர்களுக்கும் காவல்துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதையில், மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக கதையின் முதுகெலும்பாக அசத்தியுள்ளார். சௌந்தர்ராஜா. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும்.
இப்படத்தில், மூன்று சிற...

