அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’!
ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது!
நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மற...


