Tuesday, October 20

Tag: Aram sei review

அறம் செய் _ விமர்சனம்

Reviews
அறம் செய் _ விமர்சனம் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறது அரசாங்கம். இதை எதிர்க்கும் மாணவ மாணவிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த தொடங்குகிறார் பாலு எஸ்.வைத்தியநாதன். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றம் அல்ல... அதிகார மாற்றம் மட்டுமே என்ற தீர்க்கமான முடிவுடன் 'அறம் செய்' என்ற அமைப்பின் கீழ் அஞ்சனா கீர்த்தி ஒரு குழுவினருடன் போராட்டத்தை துவக்குகிறார். இந்த இரண்டு வகை போராட்டங்களும் இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று அரசுடைமை ஆக்கப்படுவதும், பின்னர் நடைபெறும் ஆட்சி மாற்றத்தால் அது மீண்டும் தனியாருக்கே செல்வதும் சில காலத்திற்கு முன்பு நாம் பார்த்த சம்பவங்கள் தான். இது போன்ற சம்பவங்கள் மட்டுமின்றி வசனங்கள் பலவும் சமகால அரசியலை நினைவூட்டுகின்றன. உதாரணத்திற்கு...