அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்
அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்
‘காதல் – மோதல் - சாதி’ - என்கிற வழக்கமான கதைதான்.
நாயகன் சக்திவேல், கிராமத்தில் வசிப்பவர். வேறு சாதி பெண்ணை காதலிக்கிறார். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்கிறது. மீறி, காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. வெளியூர் பறக்கிறார்கள்.
காதலியின் குடும்பத்தினர், தம்பதி இருவரையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
கதை, திரைக்கதை எழுதி நாயகனாக நடித்துள்ளார் பவன். காதல், மோதல், காமெடி என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி முகபாவம் காண்பிக்கிறார்.
அதே நேரம், தாத்தா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் அவரை ஊரார் தடுக்க.. இவர் அழுது புலம்பும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
அழகான நாயகி மேக்னா. காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
நாயகனின் தந்தையாக வரும் சார்லி, வழக்கம் போலவே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். குறிப்பாக, ‘என் அ...
