அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!
அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
அருண் விஜய்யை வைத்து 'குற்றம் 23' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது...

