
“சாணி காயிதம்” படத்துக்காக இயக்குநர் செல்வராகவனை இயக்கிய அனுபவத்தைப் பகிரும் அருண் மாதேஸ்வரன்!
முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி கதைக் களம் கொண்ட இந்த ஆக்சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம் கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.
பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம் எடுக்கும் போது இப்படத்...