இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”!
அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும் ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின்...
