கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!
கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!
பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (#WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றன. ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, வேறு சில பெண்களையும் அதுபோல் வெளியிடத் தூண்டி சவால் விடுவார். ஏராளமான பெண்கள் இந்த ஹேஷ்டேக்கில் தங்கள் படங்களை வெளியிட்டு ஆதரவு தந்து வரும் நிலையில், இப்போது நடிகை ஆஷிமா நார்வால், தனது படத்தை வெளியிட்டு மனிதம், அன்பு, பரிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு செய்தியையும் பகிர்ந்திருப்பது இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளை கொண்டு விட்டது.
இது குறித்து விவரித்த ஆஷிமா நார்வால் "நேர் மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இ...








