கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!
கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' வழங்கப்பட்டது.
2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..
கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மல...
