Friday, September 25

Tag: Atharvaa Murali

அதர்வா முரளி நடிக்கும் “இதயம் முரளி”!

அதர்வா முரளி நடிக்கும் “இதயம் முரளி”!

News
Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா! Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ...

நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘பட்டத்து அரசன்’!

News
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது! லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் அதர்வா முரளியின் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்பதில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படமும் நிச்சயம் கவனம் பெறும். அதர்வா முரளியின் அற்புதமான தி...
சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!

News
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்க சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’! பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் ...
சுற்றுலா மாநாடு விருதை வென்ற “தள்ளிப் போகாதே”!

சுற்றுலா மாநாடு விருதை வென்ற “தள்ளிப் போகாதே”!

News
இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின் “தள்ளிப் போகாதே” அதர்வா & அனுபமா பரமேஸ்வரன் நடித்த தமிழ்த் திரைப்படம் “தள்ளிப் போகாதே”. இப்படத்தை மசாலா பிக்ஸ் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அந்த அழகான படப்பிடிப்பிற்கு (IIFTC) இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்றுள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இயக்குநர் தயாரிப்பாளர் அனுராக் பாசு, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ரோனி லஹிரி, தயாரிப்பாளர் வர்தா கான் நந்தியாத்வாலா, ஆகியோர் முன்னிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் விருதை பெற்றார். இந்நிகழ்ச்சியில் பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யோஹானி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்....
“‘நவரசா’ ஆந்தாலஜி “துணிந்த பின்” பகுதியில் நடித்தது வித்தியாசமான அனுபவம்” – அதர்வா முரளி!

“‘நவரசா’ ஆந்தாலஜி “துணிந்த பின்” பகுதியில் நடித்தது வித்தியாசமான அனுபவம்” – அதர்வா முரளி!

News
 தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.  விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள "துணிந்த பின்"  கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.  தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள  "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது. இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி,  நடிகர்  அதர்வா முரளி கூறியதாவது.. இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை  பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை  சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.  இந...
மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி!

மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி!

News
மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி! பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! “100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற “மாறா” திரைப்படத்தினை தயாரித்த Pramod Films தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார். நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” ...
அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை ! 

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை ! 

News
தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள்.  இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள்  மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கிலாக இனிதே அரங்கேறியது. கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது. இந்த நல்ல செய்தி குறித்து அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர...
“குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக் !

“குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக் !

News
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி இடைவெளி இல்லாமல் மிக பிஸியாக நடித்து வருகிறார். MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர்             R கண்ணன்  தாயாரித்து இயக்கும்   இன்னும் தலைப்பிடாத “Production no 3” படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புறம் அவர் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படத்தை முடிக்கும் தருவாயில் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. வழக்கமாக ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால் “குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா முரளி குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்கிறார். வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார...
பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

News
ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பும் கல்வி கற்கும் படிநிலைகளை போன்றது. அதில் புதுமையான மற்றும் தனித்துவமான கரு உருவாக்கப்பட்டு, அதை படமாக்கி, அதை மக்களுக்கு காண்டிபிக்கிறார்கள். அதை அந்த துறையின் மாஸ்டர்களாக இருக்கும் ஜாம்பவான்கள் பாராட்டுகிறார்கள். அதுவே படத்துக்கு கிடைக்கும் உச்சகட்ட அங்கீகாரமாகவும் அமைகிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஒரு புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாரிடம் இருந்து நிபந்தனையற்ற, இதயபூர்வமான பாராட்டுகள் கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் அனுபவங்களையும், சினிமாவின் நீண்ட பயணங்களையும் மறந்து, ஒரு குழந்தையைப் போல் உற்சாகமடைவார்கள். அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் அதர்வா முரளி நடித்துள்ள "பூமராங்" படத்தின் ஒட்டுமொத்த குழுவும் இருக்கிறது. அதற்கு காரணம் பூமராங் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மொத்த படக்குழுவையும் வெகுவாக பாராட்டியிருப்பது தான். ...
விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங்

விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங்

News
ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் 'பூமராங்' படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.   எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்க...