‘அயலி’ – வெப் சீரிஸ் விமர்சனம்
'அயலி' - வெப் சீரிஸ் விமர்சனம்
ஜனவரி 26ஆம் தேதி முதல் ஜீ5 ஒரிஜினலாக ஸ்ட்ரீமாகும் அயலி வெப் சீரிஸில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கப் போகிறது என்றால் மிகையல்ல.
பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அல்லது நடந்த விஷயங்களை, குறிப்பாக பெண் கல்வி மறுக்கப்படுவதையும், பூப்பெய்திய பெண்ணை உடனடியாக திருமணம் செய்து கொடுப்பதையும், அதனால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளையும் முகத்தில் அறைந்தாற்போல் விரிவாகவும் சுவைபடவும் சொல்லியிருக்கிறாள் அயலி.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்காகவே இயக்குநர் முத்து குமாருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
குக்கிராமம் ஒன்றில் 1990ஆம் ஆண்டு பின்னணியில் நடப்பதாக புனையப்பட்ட கதை என்றாலும் மாதவிடாய் காலத்தில் இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்தாமல், பழைய துணியை கிழித்து பயன்படுத்துவதும், அந்தத் துணியையே துவைத...
