பனாரஸ் – திரை விமர்சனம்
பனாரஸ் - திரை விமர்சனம்
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது....
யுவதி ஒருத்தியிடம் வந்து ஓர் இளைஞன் நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன். நீதான் என் மனைவி எனக் கூறுகிறான்.... டைம் லூப்பில் நான் இருக்கிறேன் என்று சொல்லி அவளைக் குழப்புகிறான்.
அடுத்ததாக நண்பர்கள் குழாமுடன் இருக்கும் அந்த இளைஞன், மனைவி என்று பொய் சொல்லி அந்தப் பெண்ணின் படுக்கையறைவரை சென்று, தான் பந்தயத்தில் ஜெயித்து விட்டதாகக் கூறுகிறான்.
மேலும் அந்த யுவதியுடன் நெருக்கமாக தான் இருப்பதுபோன்ற சுயவிவரப் படத்தையும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட, கதை விறுவிறுவென ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.
இளைஞனால் பாதிக்கப்பட்ட யுவதி, தன் சித்தப்பா மற்றும் சித்தி இருக்கும் பானாரஸூக்கு சென்றுவிட, தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்க இளைஞனும் பனாரஸ் செல்கிறான்.
பனாரஸின் ஆட்டோ ஓட்டும் தமிழர் ஒருவர் இளைஞனுக்கு உதவ முன் ...
