Tag: beemji
உலக அளவில் 2019 க்கான சிறந்த அரசியல் பாடல் தொகுப்பில் பா.இரஞ்சித் தின் “மகிழ்ச்சி” ஆல்பம்…
இயக்குனர் பா.இரஞ்சித் தின் இசைக்குழுவான "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் " குழுவினரின் "மகிழ்ச்சி" ஆல்பம் சமீபத்தில் வெளியானது.
முழுக்க முழுக்க தனியிசைக்கலைஞர்களைக்கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது. தென்மா இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் நிலவும் சாதிய ,வர்க்க , பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இன்னிலையில் உலக அளவில் அரசியல் பார்வையுடைய பத்து பாடல் தொகுப்புக்களில் "மகிழ்ச்சி" ஆல்பமும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பாடல் தொகுப்புக்களில் "மகிழ்ச்சி" என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனியிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர்கள் கலந்துகொண்ட பல கலைகள் என மறக்கப்பட்ட நம் கலைகள் பல நிகழ்த்தப்பட்டன,
மூன்று நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரங்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். கடைசி நாள் நிகழ்வில் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் குழுவினர் இசையமைத்துப்பாடிய "மகிழ்ச்சி" இசை ஆல்பம் வெளியிடப்பட்டது ,இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார் . இதில் மகிழ்ச்சி என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ...
பரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் சிவப்பக் கம்பள வரவேற்பு (RED CARPET WELCOME) கொடுத்து கெளரவிப்பது வழக்கம். கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் 49வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு ஐநாக்ஸ் வளாகத்தில் சிவப்பு்க் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரையிடலுக்கு முன்பு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஆகியோருக்கு திரைப்பட விழாக்குழுவினர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
...
