பரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

0

 389 total views,  1 views today

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் சிவப்பக் கம்பள வரவேற்பு (RED CARPET WELCOME) கொடுத்து கெளரவிப்பது வழக்கம். கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் 49வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு ஐநாக்ஸ் வளாகத்தில் சிவப்பு்க் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

திரையிடலுக்கு முன்பு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஆகியோருக்கு திரைப்பட விழாக்குழுவினர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

 

Share.

Comments are closed.