‘பாய்’ _ திரைப்பட விமர்சனம்
'பாய்' _ திரைப்பட விமர்சனம்
ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ்.
கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
'தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல 'என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது.
படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு பற்றிய செய்தி இடம் பெறுகிறது.
நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துவது, மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதில் சுகம் காண்பது, வன்முறையில் சாகச உணர்வை அடைவது,பணத்துக்காக இந்தச் செயல்களைச் செய்வது என்ற நோக்கில் நாட...
