Friday, October 24

Tag: Bison review

பைசன்_ விமர்சனம்

பைசன்_ விமர்சனம்

Reviews
பைசன்_ விமர்சனம் சமூகப் பிரக்ஞை உள்ள மிகச் சில இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் மிகுந்த பொறுப்புணர்வுடன் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர். தென் தமிழகத்தில் தலை விரித்தாடும் ஜாதிய மோதல்களை கபடி விளையாட்டின் பின்னணியில் எந்த சார்பு நிலையும் இன்றி அற்புதமான படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கபடி விளையாட்டுக்காக இந்திய அரசிடமிருந்து அர்ஜுனா விருதை பெற்ற கபடி வீரர் மணத்தி சண்முகம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை பைசன். கபடி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம் தன் தந்தை பசுபதி, மற்றும் மூத்த சகோதரி ரதிஷா விஜயன், ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். கபடி விளையாட்டு தன் மகனின் வாழ்க்கையில் "விளையாடி" விடக் கூடாது என்பதற்காக துருவ் கபடி  ஆடுவதை தடுக்க முயல்கிறார் தந்தை பசுபதி. ஆயின...