Friday, October 23

Tag: Black movie review

பிளாக் _ விமர்சனம்

Reviews
பிளாக் _ விமர்சனம் தம்பதிகளான ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் தாங்கள் வாங்கி இருக்கும் புதிய வீட்டில்  ஐந்து நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டு அங்கு செல்கின்றனர். கடற்கரைக்கு வெகு சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த குடியிருப்பில் அதுவரை யாருமே குடி வரவில்லை. அடுக்குமாடி குடியிருப்பாக அல்லாமல் தனித்தனி வில்லாவாக அமைந்துள்ள பகுதி அது. அங்கு நுழையும் போதே ஒருவித அமானுஷ்யத்தை உணர்கிறார் ஜீவா. திடீரென மின்தடை ஏற்படவே ஜீவா பிரியா பவானி சங்கர் இருவருமே கிளப் ஹவுஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜெனரேட்டரை ஆன் செய்கிறார்கள்.  இதைத்தொடர்ந்து சில திகிலான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. யாருமே இல்லாத எதிர் வீட்டில் திடீரென்று விளக்கு எரிவது கண்டு இருவரும் அங்கு சென்று பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைகிறார்கள். காரணம் அச்சு அசலாக தங்களைப் போலவே தோற்றமளிக்கும் மற்றொரு ஜோடி அதாவ...