போகி _ விமர்சனம்
போகி _ விமர்சனம்
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் திரைப்படம் போகி.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மலை கிராமம் ஒன்று.
அங்கு வசிக்கும் மக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்கூட, தூளி கட்டி படுக்க வைத்து பல கிலோ மீட்டர்கள் கீழே இறங்கி அடிப்பகுதியில் உள்ள நகரத்தில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் தன் தங்கை சுவாசிகாவை நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்து டாக்டராக்கி தனது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார் நபி நந்தி.
ஆனால் விதி இந்த அண்ணன் தங்கை வாழ்க்கையில் விளையாடி விடுகிறது.
ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து வெளிநாடுகளுக்கு விற்கும் கூட்டத்தின் வக்கிரமான காம வியாபாரத்திற்கு பலியாகிறார் சுவாசிக்கா.
தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன் நபி நந்திக்கு இந்த உண்மை தெரிய வர, சமூக விரோத கும்பலை ...
