
ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவான திரைப்படம் “பூர்வீகம்”!
“பூர்வீகம்”
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.
நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவாயம் இந்த இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிற்காகவும் முழுதாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும் அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது... ஆனால் மக்கள் த...