புஜ்ஜி அட் அனுப்பட்டி _ விமர்சனம்
புஜ்ஜி அட் அனுப்பட்டி விமர்சனம்
‘தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கானதாக இருப்பதில்லை' என்கிற விமர்சனம், உண்டு.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் அத்தி பூத்தது மாதிரி சில நல்ல படங்கள் வருவது உண்டு.
அந்த வகையில் மலந்திருக்கும் பூ.. ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்.. அண்ணன் சரவணன் - தங்கை துர்கா. இருவரும் ஊத்துக்குளி அருகே ஒரு கிராமத்தில் பெற்றோர்களுடன் பண்ணை வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். எளிய குடும்பம்.
. பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்.
சிறுவன் சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து அவனும், அவன் தங்கை துர்காவும் வீடு திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது.
துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள்.
...
