கால் டாக்ஸி – விமர்சனம்
கால் டாக்ஸி - விமர்சனம்
கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் கால் டாக்ஸி படத்தில் புதுமுகம் சந்தோஷ் சரவணன் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார் போன்ற மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களே.
கால் டாக்ஸி டிரைவர்களின் பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் கதைக்களன் சற்று புதிதாக இருக்கிறது.
கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் தன் சொந்த அலுவல் கராணமாக செல்ல வேண்டியிருப்பதால், தான் செல்ல வேண்டிய சவாரிக்கு தனது நண்பரான மற்றொரு டிரைவரை அனுப்பி வைக்கிறார்.
சவாரி சென்று கொண்டிருக்கையில், தன் காரில் பயணிப்பவர்களின் பேச்சிலிருந்து அவர்கள், தவறான காரியங்களில் ஈடுபடும் நிழலான ஆசாமிகள் என்பது டிரைவருக்குத் தெரிய வருகிறது....
