நடிகர் தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் கலந்து கொண்ட ” புற்றுநோய் கருத்தரங்கு “!
நடிகர் தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் கலந்து கொண்ட " புற்றுநோய் கருத்தரங்கு "!
வடபழனியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஐய்யா அவர்களால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பேடர்சன் கேன்சர் சென்டர்(PCC) இன்று (19-06-2021 )தனது 18-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
புற்றுநோய் மருத்துவ நிபுணர் S. விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் புற்றுநோய் இல்லாத முழுமையான சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பொன்ராஜ் வெள்ளைச்சாமி அவர்களும் திரைத்துறை “பலகுரல் வித்தகர்” நடிகர் தாமு காக்கா முட்டை விக்னேஷ் அவர்களும், ஏ.ஆர்.ஆர். மருத்துவமனை கடலூர் தலைமை இயக்குநர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சசிதர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நடிகர் தாமு அவர்கள் டாக்டர் விஜயராகவன் - ஐ பற்றி பேசும் போது பேடர்சன் மூலமாக மாணவர்க...
