நடிகர் தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் கலந்து கொண்ட ” புற்றுநோய் கருத்தரங்கு “!

0

 225 total views,  1 views today

நடிகர் தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் கலந்து கொண்ட ” புற்றுநோய் கருத்தரங்கு “!

வடபழனியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஐய்யா அவர்களால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பேடர்சன் கேன்சர் சென்டர்(PCC) இன்று (19-06-2021 )தனது 18-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
புற்றுநோய் மருத்துவ நிபுணர் S. விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் புற்றுநோய் இல்லாத முழுமையான சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பொன்ராஜ் வெள்ளைச்சாமி அவர்களும் திரைத்துறை “பலகுரல் வித்தகர்” நடிகர் தாமு காக்கா முட்டை விக்னேஷ் அவர்களும், ஏ.ஆர்.ஆர். மருத்துவமனை கடலூர் தலைமை இயக்குநர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சசிதர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நடிகர் தாமு அவர்கள் டாக்டர் விஜயராகவன் – ஐ பற்றி பேசும் போது பேடர்சன் மூலமாக மாணவர்களுக்கான புற்று நோய் குறித்து விழிப்புணர்வு, முகாம்கள் நடத்துவது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கிராமங்களாக தத்தெடுத்து உடல் பரிசோதனை செய்து புற்றுநோய் இருக்கும் நபர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகிறார்கள்.
இதேபோல் இந்த 18 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான புற்று நோயாளிகளை இந்த பேடர்சன் (PCC) மூலமாக குணப்படுத்தி வருகிறார்கள் . இவர்களின் சமூக சேவையை நான் மனதார பாராட்டுகிறேன். மேலும் புற்று நோய் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணித்து கொண்டி ருக்கும் பேடர்சன் கேன்சர் சென்டர்(PCC) சேவையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்தி ,நலமடைய கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீ ஸ்ரீதரன் ceo pcc நன்றி நவில கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

Share.

Comments are closed.