Friday, October 23

Tag: capmari sachandrasekar

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

News
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்காக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகர், நான் எழுபது படங்களை இயக்கிய கார் பங்களா பேங்க் பேலன்ஸ் என்று செட்டில் ஆகிவிட்டேன். ஆனால் பார்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு படத்தைப் பார்த்த பிறகு அவரிடம் உதவி இயக்குநராக ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேடையில் பாராட்ட இதை நான் சொல்லவில்லை. நிஜமாகவே அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது என்று சத்தியம் செய்யாத குறையாக பாராட்டிப் பேசினார். இரண்டு நாட்களுக்கு முன் எஸ் ஏ.சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற படத்தைப் பார்தபோது, மிஸ்டர் பார்த்திபன் இதை சீரியசாக எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.சியை உதவி இயக்குநராக்கி அவருக்கு நல்ல சினிமா என்றால் என்னவென்று ஏன் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் பாத்திபன் சார் இதில் உள்ள பேர...
கேப்மாரி படம் குறித்து அரசாங்கம் ஆலோசிக்குமா?

கேப்மாரி படம் குறித்து அரசாங்கம் ஆலோசிக்குமா?

News
நாளை 13ஆம் தேதி வெளியாகும் தமிழ்படங்களின் பட்டியலில் எஸ்.ஏ.சந்திரசேகரின் கேப்மாரி படமும் வெளியாவதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசாங்கம் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து விருது தருவதுபோல் 'கேப்மாரி' மாதிரி படங்களை எடுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரியான ஆட்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆறு ஆண்டுகளுக்காவது சிறை தண்டனை கொடுத்தால் என்ன என்பதை சீரியசாக யோசிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் 'கேப்மா'  படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய எண்ணம் இது. விரிவான விமர்சனம் நாளை இரவு நியு சினிமா எக்ஸ்பிரஸ்.டாட் காம் இணையதளத்தில் நாளை இரவு வெளியாகும்...