பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

0

 446 total views,  1 views today

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்காக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகர், நான் எழுபது படங்களை இயக்கிய கார் பங்களா பேங்க் பேலன்ஸ் என்று செட்டில் ஆகிவிட்டேன். ஆனால் பார்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு படத்தைப் பார்த்த பிறகு அவரிடம் உதவி இயக்குநராக ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேடையில் பாராட்ட இதை நான் சொல்லவில்லை. நிஜமாகவே அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது என்று சத்தியம் செய்யாத குறையாக பாராட்டிப் பேசினார்.

இரண்டு நாட்களுக்கு முன் எஸ் ஏ.சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற படத்தைப் பார்தபோது, மிஸ்டர் பார்த்திபன் இதை சீரியசாக எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.சியை உதவி இயக்குநராக்கி அவருக்கு நல்ல சினிமா என்றால் என்னவென்று ஏன் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்று தோன்றியது.

ஆனால் பாத்திபன் சார் இதில் உள்ள பேராபத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எஸ்.ஏ.சந்திரசேகரை உதவி இயக்குராக்கிகொண்ட பிறகு, நல்ல சினிமாவை அவருக்கு சொல்லிக் கொடுப்பதற்குப் பதில் பார்த்திபனை இவர் மீண்டும் உள்ளே வெளியே படம் எடுக்க வைத்து விடும் ஆபத்தை ஆர்.பார்திபன் முழுமையாக உணர்நதுகொள்ள வேண்டும்.

Share.

Comments are closed.