‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ வெளியானது!*
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் முதல் பாடல் 'கார்மேனி' இன்று வெளியீடு!
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 24) மாலை 5.55 மணிக்கு வெளியானது. நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
உணர்ச்சிப்பூர்வமான 'கார்மேனி' பாடல் செல்வத்தின் வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் "நேர்மை...
