Friday, October 23

Tag: chandramukhi2 review

சந்திரமுகி 2 _ விமர்சனம்

சந்திரமுகி 2 _ விமர்சனம்

Reviews
சந்திரமுகி 2 _ விமர்சனம் மறக்க முடியாத பாத்திரங்களில் ரஜினிகாந்த் ஜோதிகா நடித்து வெளியான சந்திரமுகி வசூல் சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் கங்கணா ரணாவத் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா? பெரும் செல்வந்தரான ராதிகா குடும்பத்தில் தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து குடும்ப ஜோதிடரை கலந்து ஆலோசிக்கும் ராதிகாவுக்கு குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்லாததே காரணம் என்று ஜோதிடர் மூலம் தெரியவருகிறது. குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட ராதிகாவின் மூத்த மகளின் குழந்தைகள் இருவர், அவர்களின் பாதுகாவலர் ராகவா லாரன்ஸ் மற்றும் இரண்டாவது மகள் லஷ்மி மேனன் கணவர் சுரேஷ் மேனன் ஆகியோருவுடன் குலதெய்வம் கோயிலுக்கு புறப்படுகிறார் ராதிகா. ...