Thursday, October 30

Tag: “Chiyaan” Vikram

‘என் தந்தை இல்லாமல் நான் இல்லை’ – துருவ் விக்ரம்

‘என் தந்தை இல்லாமல் நான் இல்லை’ – துருவ் விக்ரம்

News
துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம...