தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசும் ‘சோழநாட்டான்’
செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் 'சோழநாட்டான்' திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
"பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கும் 'சோழநாட்டான்' முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது.
'சோழநாட்டான்' திரைப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது....
