கோப்ரா – திரைப்பட விமர்சனம்
கோப்ரா - திரைப்பட விமர்சனம்
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம், இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா.
ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அசத்தலாக இருக்கின்றன படத்தின் ஆரம்பக் காட்சிகள்.
ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர் கொல்லப்படுகிறார்.
இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர் கொல்லப்படுகிறார்.
ரஷ்யாவில் இருக்கும் ராணுவ தளபதி கொல்லப்படுகிறார்
உலகின் வெவ்வேறு பகுதிளிலும் அதிமுக்கிய பிரமுகர்கள் கொல்லப்படுவதன் காரணம் என்ன....
ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாதவர்களாக இருக்கும் இவர்கள் ஏன் கொல்லப்படுகிறரா்கள். இவர்களை கொல்வது யார்....
எதற்காக இந்த கொலைகள் நடக்கின்றன என்பதுதான் கோப்ரா படத்தின் கதை.
இந்தக் கொலைகள் செய்யப்படு...
